கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு!

 

எனக்கு கொரோனா வந்தால் நான் மம்தா பானர்ஜியை சென்று கட்டிப்பிடிப்பேன் என்று பாஜக பிரமுகர் ஒருவர் மேடை ஒன்றில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாஜக கூட்டமொன்றில் கட்சியின் தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா என்பவர் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் ’எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டல் உடனே நேராக மம்தா பானர்ஜியை பார்த்து அவரை கட்டிப் பிடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் 

எங்கள் கட்சி தொண்டர்கள் கொரோனாவுடன் மட்டுமின்றி மம்தா பானர்ஜிக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள் என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web