காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தால் கன்னியாகுமரியில் போட்டியிடுவேன்: விஜய் வசந்த்

சமீபத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்பியும் தொழிலதிபருமான வசந்தகுமார் உடல்நலக்கோளாறு காரணமாக பலியானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவருடைய மகனும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து அவர் மேலும் கூறியபோது ’நான் அரசியலுக்கு வர வேண்டும் என எனது தந்தையின் நண்பர்கள் விரும்புகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் அவர்களுக்கு நல்ல பெயர் இருப்பதால் அவரது மகன் என்ற முறையில் விஜய் வசந்த் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த தொகுதியில் பொன்ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக விஜய் வசந்த்தை தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web