திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்தால் தற்கொலை செய்து கொள்வேன்: அன்வர்ராஜா

 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

anwar raja 1280

ராமநாதபுரத்தில் நடந்த எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அவர்கள் கூறியபோது ’திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை கூறிவருகிறார். அப்படி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்து விட்டால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் 

இதேபோன்று கடந்த மக்களவைத் தேர்தலின்போது நகை கடன் ரத்து, விவசாய கடன்களுக்கு என பொய்யான வாக்குறுதிகளை அளித்தார். அதேபோல் தற்போதும் நீட் தேர்வு ரத்து என்ற பொய்யான வாக்குறுதியை அளித்து வருகிரார்.  நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதனால்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்

From around the web