எச்.ராஜா வீட்டு மாடுகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்: அண்ணாமலை

ஹெச் ராஜா வீட்டின் பண்ணையில் வளர்ந்து வரும் பூர்வீக மாடுகளைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

ஹெச் ராஜா வீட்டின் பண்ணையில் வளர்ந்து வரும் பூர்வீக மாடுகளைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில நாட்களில் அவருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி விரைவில் அவர் ராஜ்யசபா எம்பியாக மாறப் போகிறார் என்றும் மத்திய அமைச்சராகவும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இன்று பாஜக பிரமுகர் எச் ராஜா அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்த அண்ணாமலை இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் ஒரு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று எங்கள் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவர் எச்.ராஜா அவரக்ளை காரைக்குடியில்,அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். இவர் தைரியம், கனிவான இதயம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. அவர் பண்ணையில் வளர்க்கும் பூர்வீக ரக மாடுகளை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

From around the web