ஜெயலலிதா பணி பற்றியே பேசினேன்; தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை!

முதல்வர் செய்யப்பட்ட பணிகள் பற்றிய பேசியதாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று கூறுகிறார் ஆர் எஸ் பாரதி!
 
ஜெயலலிதா பணி பற்றியே பேசினேன்; தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை!

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து மறைந்தவர் தமிழகத்தின் பெண் முதல்வரான செல்வி ஜெ ஜெயலலிதா. இவர் தமிழகத்தின் மக்கள் மத்தியில் அம்மா என்று அழைக்கப்பட்டார். மேலும் இவர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் என்ற திட்டமானது ஏழை எளியவர்களின் பசியையும் போக்கியது. மேலும் இவர் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்பட்டார். பெயர் பெற்ற ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் 2011 மற்றும் 2016ம் ஆண்டு வெற்றி பெற்று இரண்டு முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.bharathi

அவர் மறைவுக்குப் பின்னர் முதல்வராக ஓ பன்னீர்செல்வம் இருந்தார். அதன் பின்னர் தற்போது எடப்பாடிபழனிசாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பேசியதாக திமுகவின் ஆர் எஸ் பாரதி மீது வழக்கு போடப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக திமுகவின் ஆர் எஸ் பாரதி மீது வழக்கிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2015 நவம்பரில் வேளச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக ஆர் எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.

மேலும் தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர் எஸ் பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் முதல்வர் ஜெயலலிதா செய்யவேண்டிய பணிகள் பற்றி பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்க வில்லை என்றும் ஆர் எஸ் பாரதி யின் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆர் எஸ் பாரதி ஆஜராக விலக்கு அளித்து ஜூன் 15-க்குள் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web