"கடமையை நான் நிறைவேற்ற வேண்டி இருக்கிறது"-முதல்வரின் கடிதம்!!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்!
 
stalin

தற்போது நம் தமிழகத்தில் உதயசூரியனின் ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்னர் உதயசூரியன் சின்னம் உதித்துள்ளது என்றே கூறலாம். முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்று தனது பணியை பொறுப்புடன் செய்து வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் அவர் திமுக கட்சி தலைவராகவும் தனது பணியை திறம்பட செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அந்த தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அத்தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார்.stalin

மேலும் தமிழகத்தில் உள்ள பிற திமுக எம்எல்ஏக்கள் போட்டியிட்ட தொகுதியில் பெரும்பான்மை பிடித்து தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வருகின்றனர் இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக மீண்டும் எழுந்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது பணியினை திறம்பட செய்து வருகிறார். அவர் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு பொருட்களை வழங்கி வந்ததும் தெரியவந்தது.

 தற்போது அவர் கடிதம் ஒன்று எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து மக்களுக்குமான இந்த அரசு தனது பணிகளை தொய்வின்றி மேற்கொண்டு வருகிறது என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். மேலும் கடமையை நான் நிறைவேற்ற வேண்டி இருக்கிறது என்று அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கண்ணியமிக்க செயல்பாடு என்பது நீங்கள் கட்டுப்பாடு காப்பதுதான் என தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

From around the web