டிரம்பு குணமாகிவிட்டதை நான் நம்ப மாட்டேன்: ஜோபிடன்

 

அமெரிக்க அதிபர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதை நம்ப நான் தயாராக இல்லை என்றும் அதனால் அவருடன் நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 


அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாக அறிவிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உண்மையிலேயே குணமாகி விட்டதா? என்ற சந்தேகத்தை பலர் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து அமெரிக்க அதிபர் முழுமையாக குணமடையாவிட்டால் அவருடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என ஜோபிடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 நாளிலேயே டிரம்ப் வீடு திரும்பியது தனக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட விவாதத்தில் பங்கேற்க இருப்பதாக டிரம்ப் விருப்பம் தெரிவித்தார் 

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ஜோபிடன், டிரம்ப் உடனான வாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஆனால் அதே நேரத்தில் அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீளாத பட்சத்தில் விவாதத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web