எஸ்.ஏ.சி கட்சியில் நான் இல்லை: ஷோபா சந்திரசேகர் பேட்டி!

 

நேற்று மாலை திடீரென விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதாகவும் அதன்பின்னர் விஜய் கட்சி தொடங்கவில்லை என்றும்,  விஜய்யின் தந்தை தான் கட்சி தொடங்கியதாகவும் விஜய் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த விஜய் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கட்சி தொடங்கினேன் என்று அவர் விளக்கம் அளித்திருந்தார் 

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய்யின் தாயார் ஷோபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் நான் எஸ்.ஏ.சி கட்சியிலிருந்து விலகி விட்டேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எஸ்.ஏ.சி அவர்கள் அசோசியேசன் தொடங்க வேண்டும் என்பதற்காகவே என்னிடம் பேசி கையெழுத்து கேட்டார் என்றும் ஆனால் கட்சி தொடங்குவதற்காக மீண்டும் ஒருமுறை கையெழுத்து கேட்டபோது நான் கையெழுத்துப் போடவில்லை என்றும் ஷோபா கூறினார் 

மேலும் அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று எஸ்.ஏ.சி அவர்களிடம் விஜய் கூறி இருந்தார் என்றும் எஸ்.ஏ.சி கேட்கவில்லை என்பதால் விஜய் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்றும் ஷோபா கூறினார் எதிர்காலத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஷோபா மேலும் கூறினார் 

எஸ்.ஏ.சி கட்சியின் பொருளாளராக ஷோபா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் அக்கட்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web