ஹைதராபாத் மக்களை உலுக்கிய பெண் டாக்டர் கொலை -கீர்த்தி சுரேஷ் வேதனை

ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வெர்டினரி பெண் டாக்டர் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க பாதியில் ஸ்கூட்டி ரிப்பேர் ஆகிவிட்டதால் தனது தங்கைக்கு ஃபோன் செய்து பதறியுள்ளார். இரவு நேரமாக இருப்பதால் இங்கு நிற்க பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் தங்கை, அருகில் உள்ள டோல்கேட்டுக்கு முதலில் சென்று விடு அங்கு சென்றால் பாதுகாப்பு என்று கூறி இருக்கிறார். அருகில் நிறைய லாரி டிரைவர்கள் இருந்ததால் அதிகம் பயந்துள்ளார் பிரியங்கா.இருந்தாலும் யாரோ சில டிரைவர்கள் அவருக்கு உதவி செய்கிறேன்
 

ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வெர்டினரி பெண் டாக்டர் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க பாதியில் ஸ்கூட்டி ரிப்பேர் ஆகிவிட்டதால் தனது தங்கைக்கு ஃபோன் செய்து பதறியுள்ளார். இரவு நேரமாக இருப்பதால் இங்கு நிற்க பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் தங்கை, அருகில் உள்ள டோல்கேட்டுக்கு முதலில் சென்று விடு அங்கு சென்றால் பாதுகாப்பு என்று கூறி இருக்கிறார்.

ஹைதராபாத் மக்களை உலுக்கிய பெண் டாக்டர் கொலை -கீர்த்தி சுரேஷ் வேதனை

அருகில் நிறைய லாரி டிரைவர்கள் இருந்ததால் அதிகம் பயந்துள்ளார் பிரியங்கா.இருந்தாலும் யாரோ சில டிரைவர்கள் அவருக்கு உதவி செய்கிறேன் என அழைத்து சென்று அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்து கொன்றுள்ளனர். நேற்று முன் தினம் இரவு நடந்த இக்கொடூரத்தை நினைத்து ஹைதரபாத் மக்கள் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்

  தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மனம் நொறுங்கிவிட்டது.

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

From around the web