டீயில் சர்க்கரை இல்லை என்பதால் மனைவியை கொலை செய்த கணவன்: அதிர்ச்சி தகவல்

டியில் சர்க்கரை போட மறந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் உபி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பார்பர் என்ற பகுதியை சேர்ந்தவர் பப்லுகுமார். இவருடைய மனைவி ரேணுவிடம் சம்பவ தினத்தில் டீ கொண்டுவருமாறு கேட்டுள்ளார். வழக்கம்போல் டீ போட்ட மனைவி ரேணுகா அன்றைய தினம் டீயில் சர்க்கரை போட மறந்து விட்டதாக தெரிகிறது அந்த டீயை குடித்து அதில் சர்க்கரை இல்லாததை அறிந்து உடனே ஆத்திரமடைந்த கணவன் உடனே அருகில்
 

டீயில் சர்க்கரை இல்லை என்பதால் மனைவியை கொலை செய்த கணவன்: அதிர்ச்சி தகவல்

டியில் சர்க்கரை போட மறந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் உபி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பார்பர் என்ற பகுதியை சேர்ந்தவர் பப்லுகுமார். இவருடைய மனைவி ரேணுவிடம் சம்பவ தினத்தில் டீ கொண்டுவருமாறு கேட்டுள்ளார். வழக்கம்போல் டீ போட்ட மனைவி ரேணுகா அன்றைய தினம் டீயில் சர்க்கரை போட மறந்து விட்டதாக தெரிகிறது

அந்த டீயை குடித்து அதில் சர்க்கரை இல்லாததை அறிந்து உடனே ஆத்திரமடைந்த கணவன் உடனே அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். இதுகுறித்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ரேணுகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரேணுவை கொலை செய்த அவரது கணவர் பப்லுகுமார் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்

பப்லுகுமார்-ரேணுகா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் தற்போது மூன்று குழந்தைகளும் அம்மா அப்பா இல்லாமல் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று குழந்தைகள் தான் இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web