கூகுள் மேப் மூலம் மனைவியின் கள்ளக்காதலனை கண்டுபிடித்த கணவர்: அதிர்ச்சி தகவல்

கூகுள் மேப் மூலம் குறிப்பாக கூகுள் மேப் ஸ்றீட் வியூ மூலம் உலகின் எந்த ஒரு இடத்தையும் மிக அருகில் பார்க்கலாம் என்ற வசதி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூகுள் ஸ்ட்ரீட் வியூ பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென தனது மனைவியும் அவரது கள்ளக்காதலனும் இருந்ததை கண்டுபிடித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெரு நாட்டை சேர்ந்த விமு என்ற நகரத்தைச் சேர்ந்த ஒருவர் கூகுள் மேப்
 
கூகுள் மேப் மூலம் மனைவியின் கள்ளக்காதலனை கண்டுபிடித்த கணவர்: அதிர்ச்சி தகவல்

கூகுள் மேப் மூலம் குறிப்பாக கூகுள் மேப் ஸ்றீட் வியூ மூலம் உலகின் எந்த ஒரு இடத்தையும் மிக அருகில் பார்க்கலாம் என்ற வசதி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் பெரு நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூகுள் ஸ்ட்ரீட் வியூ பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென தனது மனைவியும் அவரது கள்ளக்காதலனும் இருந்ததை கண்டுபிடித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெரு நாட்டை சேர்ந்த விமு என்ற நகரத்தைச் சேர்ந்த ஒருவர் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் தற்செயலாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நடைபாதை பெஞ்சில் தனது மனைவி உட்கார்ந்து இருப்பது போன்றும் அவர் மடி மீது அவரது கள்ளக்காதலன் தலைவைத்து படுத்து இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து மனைவி வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் விசாரித்த போது தனது இன்னொரு காதல் இருப்பது உண்மைதான் என்றும் அவர் தைரியமாக கூறியுள்ளார். இதனை அடுத்து தற்போது விவாகரத்துக்கு இருவரும் விண்ணப்பித்துள்ளதாகவும், விவாகரத்து பெற்ற பின்னர் அந்தப் பெண் அவரது காதலனை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web