பசிப்பிணி போக்க வேண்டும் ஆனால் ராணுவத்திற்கு நிகரான கட்டுப்பாடு!

ஊரடங்கு காலத்தில் ஏழை எளியோர்களுக்கு பசியினை போக்க வேண்டும் என்று திமுகவினருக்கு வலியுறுத்தியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்!
 
stalin

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதில் முதல்வராக உள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான திரு மு க ஸ்டாலின் அவர் முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சி செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக தனது பத்து ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக தலைவர் , தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தலில் தாங்கியிருந்த கூடியிருந்த அத்தனை வாக்குறுதிகளையும் வரிசையாக நிறைவேற்றி வைக்கிறார்.lockdown

மேலும் அவர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிணி நீக்கும் போர்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் தமிழக மக்களின் உணவுத் தேவைக்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில் பசியாறுங்கள் என்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் ஏழை எளிய மக்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நேரடியாக உணவுப் பொருள்களை வழங்க என்றும் திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விதிமீறல் களுக்கும் இடம் தராமல் ராணுவத்திற்கு நிகரான கட்டுப்பாட்டுடன் உதவிகளை செய்ய வேண்டும் என்று தனது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் அக்கட்சியின் தலைவரும் நம் தமிழகத்தின் முதல்வருமான திரு மு க ஸ்டாலின்.

From around the web