13 வயது சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் இவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கோவையில் 13 வயது சிறுவனை காவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை
 
13 வயது சிறுவனை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் இவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் 13 வயது சிறுவனை காவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

கோவையில் கடந்த ஞாயிறு அன்று 13 வயது சிறுவனை சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் லத்தியால் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த செய்திகள் முன்னணி ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கோவையில் 13 வயது சிறுவன் தாக்கப்பட்டது குறித்து மூன்று வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அந்த நோட்டீஸில் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web