50 கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் கடத்தல்: பலர் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அம்ரோஹா என்ற பகுதியில் 50 கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சந்தன மரங்கள் விலை உயர்ந்தது என்பதால் அதனை கடத்துவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அம்ரோஹா என்ற பகுதியில் மிகவும் தரம் உயர்ந்த சந்தன மரங்கல் பதுக்கி வைத்திருப்பதாகவும், சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து காவல்துறையினர் தனிப்படை
 

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அம்ரோஹா என்ற பகுதியில் 50 கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சந்தன மரங்கள் விலை உயர்ந்தது என்பதால் அதனை கடத்துவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அம்ரோஹா என்ற பகுதியில் மிகவும் தரம் உயர்ந்த சந்தன மரங்கல் பதுக்கி வைத்திருப்பதாகவும், சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது

இதனையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் சுமார் 50 கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குடோனை போலீசார் சீல் வைத்து பூட்டினர்

இது குறித்து பேட்டியளித்த அம்ரோஹா எஸ்பி ‘இந்த சந்தன மரக்கட்டைகள் கடத்தல் குறித்து பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 50 கோடி சந்தன மரங்கள் ஒரே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web