ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? புதிய தகவல்

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண் அவசியம் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது ஏடிஎம் கார்டுகளின் பயன்பாட்டை குறைக்கவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாக யோனே என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த யோனோ செயலி மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? புதிய தகவல்

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய எண் அவசியம் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது ஏடிஎம் கார்டுகளின் பயன்பாட்டை குறைக்கவும் முறைகேடுகளை தவிர்க்கவும் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாக யோனே என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த யோனோ செயலி மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

  1. யோனோ (YONO.) என்ற செயலியை முதலில் மொபைலில் டவுன்லோடு செய்ய வேண்டும்
  2. பரிவர்த்தனையைத் தொடங்க, யோனோ கேஷ் ஆப்சனுக்கு செல்ல வேண்டும்
  3. அதன்பின்னர் ஏடிஎம் செக்சனுக்கு சென்று நீங்கள் ஏடிஎம்மில் இருந்து எடுக்க விரும்பும் தொகையை பதிவு செய்ய வேண்டும்
  4. எஸ்பிஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு யோனோ ரொக்க பரிவர்த்தனை எண்ணை
    அனுப்பும்.
  5. இந்த எண்ணைப் பயன்படுத்தி, டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்காக அவர் அமைத்த பின்னையும் கொண்டு பணத்தை ஏடிஎம்களில் எடுக்கலாம்
  6. ஒரு முறை யோனோ ரொக்க பரிவர்த்தனை எண் உருவாக்கினால் அது நான்கு மணி நேரம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே எஸ்பிஐ ஏடிஎம் சென்று ஏடிஎம் திரையில் யோனோ கேஷ் என்பதைத் தேர்ந்தெடுத்து, யோனோ பண பரிவர்த்தனை எண்ணை பதிவு செய்து, யோனோ ரொக்க பின் எண்ணை உள்ளிட்டால் பரிவர்த்தனைக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்துவிடும். அதன்பின்னர் உங்கள் பணத்தை வழக்கம் போல் எடுத்துக்கொள்ளலாம்

இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம் மையங்கலில் மட்டுமே உள்ளது என்பதும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மற்ற வங்கி ஏடிஎம் மையங்களை பயன்படுத்தும்போது இந்த வசதியை பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web