சிரமமின்றி வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்குவது எப்படி?

 
Loan Cash

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் பலரின் ஒத்துழைப்பு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தனிநபர் கடன் எளிதாக கிடைத்தாலும் அதற்கு அதிக வட்டி என்று கூறப்படுவதால் அந்தக் கடன்களை பெரும்பாலும் விரும்புவதில்லை 

இந்த நிலையில் குறைந்த வட்டியில் தொழில்கள் செய்யவும் தனிநபர் கடன் பெறவும் சுகாதார கடன் பெறவும் ஒரு எளிய வழி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கனரா வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகிய மூன்று கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த திட்டத்தில் சில சலுகை அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சுரக் ஷா பர்சனல் லோன் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும் இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கனரா சுரக்ஷா திட்டம் என்ற திட்டத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு மற்றும் மருத்துவமனைகளுக்கு 10 லட்சம் முதல் 50 கோடி வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

அதேபோல் கனரா சிகித்ஸா எனப்படும் திட்டத்தின் கீழ் தொழில்கள் தொடங்க ரூபாய் 2 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் இந்த கடன்களுக்கு வட்டி சலுகையும் உண்டு எனவும் பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த சிறப்பு அறிவிப்புகளை பயன்படுத்தி தேவைப்படும் கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web