இ பாஸ் எப்படி? என்ன? என்ற சந்தேகங்களுக்கு "1100" கால் பண்ணுங்க!

தமிழகத்தில் இ பதிவு குறித்து சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது!
 
e pass

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவை இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அனைத்து காய்கறி போன்ற கடைகள் 12 மணி வரை திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது நேரம் குறைக்கப்பட்டு 10:00 கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் பல பகுதிகளில் கடுமையாக தங்களது பணியினை ஈடுபட்டு வருகின்றனர்.e pass

தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் சுற்றியிருப்பவர்களின் வாகனமும் அவ்வப்போது பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தற்போது வெளி மாவட்டங்களுக்கு செல்வது கூட இ பாஸ்  முக்கியம் என்ற நடைமுறையில் உள்ளன, அதனால் பலரும் நிகழ்ச்சிகளுக்கும் காரியங்களுக்கும் செல்வதற்கு இ பாஸ்  செய்து வருகின்றனர். மேலும் பலரும் இதில் தவறான முறைகளையும் ஏமாற்றி வருகின்றனர்.

 தற்போது இ பாஸ்  குறித்து பல்வேறு நபர்களுக்கு சந்தேகமும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இ பாஸ்  குறித்த சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவை கட்டணமில்லாமல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இருந்தாலும் இந்த கட்டணமில்லா என்னை அழைத்தால் அவர்களின் சந்தேகம் குறைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

From around the web