தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும்?… அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!

10 ஆம் வகுப்பு தேர்வினை நடத்த எண்ணி ஹால் டிக்கெட் வழங்குதல், சிறப்பு பஸ் ஏற்பாடு, தேர்வு மையங்கள் ஏற்பாடு என தமிழக அரசாங்கம் செய்து வந்தது. ஆனால் இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக திடீர் அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டதுடன், காலாண்டு தேர்வு, அரையாண்டுத் தேர்வு, வருகைப் பதிவேடு இவற்றின்
 
தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும்?... அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!

10 ஆம் வகுப்பு தேர்வினை நடத்த எண்ணி ஹால் டிக்கெட் வழங்குதல், சிறப்பு பஸ் ஏற்பாடு, தேர்வு மையங்கள் ஏற்பாடு என தமிழக அரசாங்கம் செய்து வந்தது. ஆனால் இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக திடீர் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டதுடன், காலாண்டு தேர்வு, அரையாண்டுத் தேர்வு, வருகைப் பதிவேடு இவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும்?… அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!

அதாவது காலாண்டு மதிப்பெண் 40 க்கும், அரையாண்டு மதிப்பெண் 40க்கும், வருகைப் பதிவேடு 20 க்கும் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால் இதில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பதுதான்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்கப்பட அவர் கூறியதாவது, “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவ -மாணவிகளும் தேர்ச்சி என்று முதல் அமைச்சர் அறிவித்ததையடுத்து, 

தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழும்பியுள்ளது.

ஆனால் மக்கள் இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை, இதுகுறித்த அனைத்து விஷயங்கள் கூட்டம் அமைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

From around the web