இன்னும் எத்தனை உயிர்கள்? நீட்தேர்வு எதிராக ஆவேசமாக பொங்கிய 2 தமிழ் இயக்குனர்கள்

நீட்தேர்வு உதாரணமாக ஏற்கனவே சுபஸ்ரீ, விக்னேஷ் ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று காலை மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் தற்கொலை செய்து கொண்டார் 

 

நீட்தேர்வு உதாரணமாக ஏற்கனவே சுபஸ்ரீ, விக்னேஷ் ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று காலை மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் தற்கொலை செய்து கொண்டார் 

இந்த நிலையில் நீட்தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் திரையுலகினர் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இந்த தற்கொலை குறித்து செய்தி அறிந்ததும் ஆவேசமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் 

பிரபல இயக்குனர் நவீன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ’இன்னும் எத்தனை உயிர்கள் எத்தனை கோரிக்கைகள் எத்தனை போராட்டங்கள்’ என்று பதிவு செய்துள்ளார் 

மேலும் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ’அரியலூர் மாணவர் விக்னேஷ் மரணம் அடைந்த சில நாட்களுக்குள் மதுரை மாணவி ஜோதி தற்கொலை செய்துவிட்டார். நீட்தேர்வு படுகொலை செய்திருக்கிறது. நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாட்டால் தமிழக அரசு எத்தனை மாணவர்களை கொல்ல துணை போகப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீட்தேர்வு எதிராக இரண்டு இயக்குனர்களின் இந்த ட்விட்டுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன 

From around the web