எத்தனை பேர் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளனர்?

எத்தனை பேர் தங்கள் வீட்டில் வளர்கின்ற குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைத்துள்ளனர் என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்
 
tamil

தற்போது புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்தப்படி புதுச்சேரியில் பாஜக-என் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.என் ஆர்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தற்போது புதுச்சேரியில் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இடையே அவ்வப்போது குழப்பங்கள் நிலவுகிறது. இதன் மத்தியில் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார்.tamilisai

அவர் அவ்வப்போது  செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை கூறி வருகிறார். அதில் தற்போது அவர் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன்படி எத்தனைபேர் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளனர்? என்று அவர் கேள்வி கேட்டுள்ளார். தமிழை முதலில் வீட்டில் வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தந்துள்ளது சிலர் தவறாக சித்தரிக்கின்றனர் என்றும் பாஜக மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ் பேசுவது கடினமாக பார்க்கப் படுகிறது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் தமிழ் மொழியில் இருக்கும் புரிந்துகொள்ளும் தன்மை பிறமொழியில் பதில் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web