பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் எப்படி? மத்திய அரசுக்கு கேள்வி!!

கொரோனா நோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நல்ல திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப் போகிறது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி!
 
no parents

தற்போது நம் நாட்டில் அதிகமாக பரவும் முழுமையாக நோயாக ஆட்கொல்லி நோயாக கொரோனா காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். மேலும் நாட்டில் இதனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தாக்கம் மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் போதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் பல குடும்பத்து உறுப்பினர்கள் போன்றோர் இருப்பதால் அந்த குடும்பமே நடுத்தெருவுக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது,supermecourt

அவர்களுக்கு உதவும் வண்ணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிவாரண தொகையை வழங்குகின்றன. மேலும் இறந்தவர்களின் குடும்ப குடும்பத்திற்கும் நிவாரண தொகை வழங்கப்படுகிறது, இதில் பெரும்பாலும் குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். பல குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை இழந்து தவிக்கின்றனர்.  பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

 இந்த கொரோனா நோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நல்ல திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப் போகிறது என்று கேள்வி எழுப்பியது. இந்த திட்டத்தை செயல்படுத்த இது பற்றிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உடனடி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 10 லட்சம் வைப்புத் தொகையாக அளிப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது அதையும் சுட்டிக்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். இதனால் இது குறித்து விரிவான தகவல்கள் இன்னும் சில நாள்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web