கொரோனாவால் வேலையிழந்த பைலட் நடத்தும் ஹோட்டல்!

 

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதங்களாக உலகமெங்கும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டது என்பதும் கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனாவால் வேலை இழந்த பலர் தன்னம்பிக்கையுடன் வேறு வேலைகளைப் பார்த்து முன்னேறி வந்த அதிசயங்களும் நடந்தது உண்டு. அந்த வகையில் மலேசியாவில் கொரோனா காரணமாக வேலை இழந்த விமான பைலட் ஒருவர் மனம் தளராமல் ஹோட்டல் நடத்தி தற்போது வெற்றிகரமாக பிஸ்னஸ்மேன் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மலேசியாவில் தற்போது பிரபலமாக இருக்கும் ஹோட்டல் கேப்டன் கார்னர். இவர் கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் தனது வேலையை இழந்தார். இருப்பினும் மனம் தளராமல் இந்த ஓட்டலை ஆரம்பித்தார் 

முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஓட்டல் தற்போது சுவையான உணவு காரணமாக மலேசியாவில் பிரபலமாகிவிட்டது. இந்த ஓட்டலுக்கு நாள்தோறும் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர் 

கொரோனாவால் வேலையிழந்தும் மனம் தளராமல் உணவகம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதை அடுத்து இவருக்கு சமூக வலைதள பயனாளர்களின் பாராட்டுக்கள் குவிந்து என்பதும் இவரது புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web