விஜய்காந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் பரபரப்பு அறிக்கை!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

விஜயகாந்த் அவர்கள் மருத்துவ குழுவினர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை அடுத்து இன்று அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து அவரது கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

From around the web