எஸ்பிபி சிகிச்சைக்கு உதவும் அமெரிக்க, பிரிட்டன் டாக்டர்கள்: பரபரப்பு தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீராக உள்ளதாகவும் மாறி மாறி தகவல்கள் மருத்துவமனை அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது நேற்று முன்தினம் கவலைக்கிடமாக இருந்த எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நேற்று முதல் சீராக இருப்பதாகவும் இன்றும் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைப்படி
 

எஸ்பிபி சிகிச்சைக்கு உதவும் அமெரிக்க, பிரிட்டன் டாக்டர்கள்: பரபரப்பு தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீராக உள்ளதாகவும் மாறி மாறி தகவல்கள் மருத்துவமனை அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது

நேற்று முன்தினம் கவலைக்கிடமாக இருந்த எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நேற்று முதல் சீராக இருப்பதாகவும் இன்றும் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவர்களின் ஆலோசனைப்படி எஸ்பிபி அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சற்று முன்னர் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அதேபோல் எஸ்பிபி அவர்களுக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவரை 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மருத்துவர்களின் உதவியால் எஸ்பிபி அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்பதும் விரைவில் அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையை அனைவரும் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

எஸ்பிபி சிகிச்சைக்கு உதவும் அமெரிக்க, பிரிட்டன் டாக்டர்கள்: பரபரப்பு தகவல்

From around the web