சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தார்: நிரம்பி வழியும் ரயில்கள்!

 
சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தார்: நிரம்பி வழியும் ரயில்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் பணி செய்து கொண்டிருந்த வடமாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகம் புதுவை மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. திரையரங்குகள் மால்கள் உள்ளே பெரிய ஓட்டல்கள் ஆகியவை மூடப்பட்டு உள்ளதால் அங்கு பணி செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கின்றனர்

train passenger

மேலும் விரைவில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்படும் அபாயம் இருப்பதை அடுத்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு செல்ல தொடங்கியுள்ளனர் 

இதனால் சென்னை மற்றும் புதுவை ரயில் நிலையங்களில் வடமாநிலத்தவர்கள் பெட்டி படுக்கையுடன் ரயில்களில் நிரம்பியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது சரியாகும் என்று தெரியாததால் இனிமேலும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் குறிப்பிடதக்கது

From around the web