1.9 கோடி குடும்பத்தினருக்கு சொந்த வீடு வழங்கும் திட்டம்

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பே பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது, அதில் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையிலான பல திட்டங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் இடைக்கால பட்ஜெட்டின் பல திட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று
 

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்பே பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது, அதில் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையிலான பல திட்டங்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் இடைக்கால பட்ஜெட்டின் பல திட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறி மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

* 2022ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினரும் சொந்தமாக வீடு வைத்திருப்பார்கள். 

* வாடகை வீட்டில் குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். 

*தனி நபர் வருமானம் 5 லட்சம் வரை இருந்தால், வரி விலக்கு அளிக்கப்படும்.

1.9 கோடி குடும்பத்தினருக்கு சொந்த வீடு வழங்கும் திட்டம்


* மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது. இந்த திட்டத்திற்கு மிகுந்த ஊக்கம் அளிக்கப்படும்.

* கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்துள்ளனர். 

* இந்தியப் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயரும் – மத்திய நிதியமைச்சர் 

* டிஜிட்டல் இந்தியாவின் பலனை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம், அதன் மூலம் இந்தியா டிஜிட்டல் துறை ரீதியாக பெரும் மாற்றம் அடையும் என்பதில் சந்தேகமில்லை.

From around the web