இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதை தெரிந்தே. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் திறக்கப்படவில்லை என்பதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டது இருப்பினும் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதனை ஒரு சில மாநிலங்கள்
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதை தெரிந்தே. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் திறக்கப்படவில்லை என்பதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டது

இருப்பினும் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதனை ஒரு சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த போதிலும் இதற்கு கண்டனம் தெரிவித்து செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்று கூறுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்றும் யுஜிசி அறிவித்து இருந்தது

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 கட்டமாக பொதுமுடக்க தளர்வு வெளியிடப்பட்டுள்ளதால் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி திட்டமிட்டபடி நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுதிய ஆக வேண்டும் என்ற நிலை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web