ஹோலோகிராமில் பிரச்சாரம்: ரஜினியின் 3டி தொழில்நுட்ப திட்டம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர மாட்டார் என்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு அவர் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது 
ஆனால் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து கட்டாயம் 2021 ஆம் தேர்தலில் ரஜினிகாந்த் களமிறங்குவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்கும் வகையில் ஹோலோகிராம் 3டி தொழில்நுட்பத்தில் பிரச்சாரம் செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். அஜித் நடித்த விவேகம் படத்தில் ஏற்கனவே இதுபோல ஒரு காட்சி வரும் என்பது குறிப்பிடத்தக்கது 

ரஜினியே நேரில் நின்று பேசுவது போல் 3டியில் ஒளிபரப்பாகும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் அவரது பிரச்சாரம் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது

இந்தியாவிலேயே முதல் முறையாக ஹோலோகிராம் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் பிரச்சாரம் செய்து தேர்தலுக்கு வர உள்ளவர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும், எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்காவில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றது போல் வீட்டில் இருந்துகொண்டே ரஜினிகாந்த் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்றும் அவரது வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web