ஆத்தூரில் ரெண்டு கிடங்குகளில் சேலைகள் பதுக்கல்!

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சேலைகள் பதுக்கப்பட்டதாக புகார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் பல கட்சிகளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி  சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பாமக கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதன் மத்தியில் தமிழகத்தில்  மிகவும் பலமான எதிர்க்கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர்.

dmk

மேலும் இவ்விரு கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிவித்து அந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் கொண்டு செல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 2 கிடங்குகளில்  சேலைகள் பதுக்கப்பட்டதாக தகவல். மேலும் ஆத்தூர் பகுதியில் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் இரண்டு கிடங்குகளில் சேலைகள் பதுக்கப்பட்டதாக திமுக கட்சியினர் சார்பில் புகார். மேலும் ஒரு தரப்பினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சேலைகள் பதுக்கப்பட்டதாக திமுக தரப்பில் இருந்து புகார். சம்பவ இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web