தனது ஓட்டை கள்ள ஓட்டுப் போடப்பட்டது! இளைஞர் ஒருவர் புகார்!

தனது ஓட்டை யாரோ ஒருத்தர் கள்ள ஓட்டு போட்டதாக இளைஞர் ஒருவர் புகார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்றைய தினம் காலையில் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும்வாக்காளர்கள் தங்களது வாக்கு சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

vote

 

வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் வாக்கு பதிவு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதியம் ஒரு மணிவரை 39.61சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்ந்து இன்று காலை சென்னையில் முதியவர் ஒருவர் வாக்கை யாரோ ஒரு போடப்பட்டு இருந்தால் அதற்காக அவருக்கு டெண்டர் முறையில் வாக்குப்பதிவு மீண்டும் அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இளைஞர் ஒருவரின் வாக்கையும் வருவதாக புகார் எழுந்துள்ளது.இளைஞர் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை  வாக்குச்சாவடியில் தனது வாக்கு யாரும் செலுத்தியதாக புகார் அளித்துள்ளார்.. மேலும் அவர் ஆவணங்களை காண்பித்து புகார் அளித்த ரமேஷ் குமாருக்கு 49Pசட்டப் பிரிவின்படி மீண்டும் வாக்கு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

From around the web