இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடரும்- சுதந்திர தின விழாவில் முதல்வர்!!

தமிழகத்தில் காலம் காலமாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று, இந்தித் திணிப்பு. தமிழகத்தில் பாஜக மீதான அதிருப்தி இந்தத் தேர்தலில் தெளிவாகக் காட்டப்பட்டது; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று: இந்தித் திணிப்பு. பாஜகவிற்கு முழுவதும் ஆதரவு அளித்துவரும் அதிமுக கூட இந்த விஷயத்தில் பாஜகவிற்கு எதிராகவே செயல்படுகிறது. நாடு முழுவதும் மூன்று மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை முற்றிலும் எதிர்க்கும் தமிழர்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பது அதிர்ச்சிகரமான
 
இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடரும்- சுதந்திர தின விழாவில் முதல்வர்!!


தமிழகத்தில் காலம் காலமாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று, இந்தித் திணிப்பு. தமிழகத்தில் பாஜக மீதான அதிருப்தி இந்தத் தேர்தலில் தெளிவாகக் காட்டப்பட்டது; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று: இந்தித் திணிப்பு.

பாஜகவிற்கு முழுவதும் ஆதரவு அளித்துவரும் அதிமுக கூட இந்த விஷயத்தில் பாஜகவிற்கு எதிராகவே செயல்படுகிறது. நாடு முழுவதும் மூன்று மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடரும்- சுதந்திர தின விழாவில் முதல்வர்!!

இதனை முற்றிலும் எதிர்க்கும் தமிழர்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பது அதிர்ச்சிகரமான விஷயமாகவே உள்ளது.

இதுகுறித்து கடந்த வாரம் ஒரு விழாவில் பேசிய வெங்கையாநாயுடு கூறுகையில் “தாய்மொழியுடன் மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்வது சிறப்பான விஷயமே; மற்ற மொழிகளைக் கற்பது சிறந்த வாழ்க்கைக்கு வழிகோலும். அதனால் கற்றுக்கொள்வது நல்லது என்றார் வெங்கையாநாயுடு.

அப்போது அந்த விழா முதல்வரும், துணிய முதல்வரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் சுதந்திர உரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மட்டுமே தமிழ்நாட்டிற்குப் போதுமானது என அறிவித்தார். இந்தக் கருத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும் நாங்கள் மாற்றிக் கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

From around the web