தமிழகத்தில் அதிகபட்ச வாக்கு பதிவு விருதுநகர்  மாவட்டத்தில்! குறைந்தபட்ச வாக்குபதிவுநெல்லை மாவட்டத்தில்!

தமிழகத்தில் அதிகபட்சமாக 41.79 வாக்குகள் விருதுநகர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது!
 
தமிழகத்தில் அதிகபட்ச வாக்கு பதிவு விருதுநகர் மாவட்டத்தில்! குறைந்தபட்ச வாக்குபதிவுநெல்லை மாவட்டத்தில்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இன்றைய தினம் தொடங்கியது. அதற்கான தினம் காலை முதலே தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குபதிவாகின்றன. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது.மேலும் வாக்காளர் அனைவரிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் தமது வாக்குகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப அளவு கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு முக கவசம், கையுறை, சனிடைசர் போன்றவையும் வழங்கபட்டு வருகிறது.

election

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளையும் விதித்திருந்தது.அதிலும் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் பணப்பட்டுவாடாகளை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் கைப்பற்றி வந்தனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார்.  அவர் கூறினார் தமிழகத்தில் மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் சென்னையில் 37.1 6% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 41. 79% வாக்குகள் பதிவாகியுள்ளனதாகவும் அவர் கூறினார்.  தமிழகத்தில் குறைந்த பட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29%  வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

From around the web