முடியாது வழக்கு விசாரணை  தொடரும் அடம்பிடிக்கும் ஹை கோர்ட்!

மராட்டியத்தில் ஆக்சிசன் தட்டுப்பாடு பிரச்சினை பற்றிய வழக்கு விசாரணை தொடரும் என்று மும்பை ஹைகோர்ட் திட்டவட்டம்!
 
முடியாது வழக்கு விசாரணை தொடரும் அடம்பிடிக்கும் ஹை கோர்ட்!

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மக்களுக்கு இப்பெரிய சங்கடத்தை கொடுத்து தற்போது கண்ணுக்கு தெரியாமல் வளர்ந்துள்ளது கொரோனாநோய். இந்த கொரோனா சீனாவின் தொடங்கி அதன் பின்னர் உலக நாடுகள் பலவற்றிலும் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது. மேலும் இந்தியாவிலும் இந்த கொரோனா கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டன. ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியினால் இந்நோயானது கட்டுப்பாட்டிற்கு வந்தது. சில வாரங்களாக கொரோனா தாக்கமானது இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ளது மக்கள் அனைவருக்கும் சங்கடத்தை உருவாக்கி உள்ளது.

superme court

மேலும் இதற்கு எதிராக மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் பல அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆயினும் ஒரு சில மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிசன் தேவைப்படுகிறது மேலும் சில தினங்களாக நாடெங்கும் தட்டுப்பாடு நிலவுவதாக காணப்படுகிறது. எனினும் ஆக்சிசன்  பற்றாக்குறையினால் ஒரு சில பகுதிகளில் உயிரிழப்பும் நிலவுகிறது. ஆனால் நேற்றைய தினம் இந்த ஆக்சிசன்  கசிவால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றது. மேலும் அது அங்குள்ள மருத்துவமனையில் ஆக்சிசன் டேங்கரில் இருந்து கசிந்ததால் உயிர் பலியானதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதனை தற்போது மும்பை ஹைகோர்ட் மறுத்துள்ளது .மேலும் மகாராஷ்டிரத்தில் ஆக்சிசன்  தட்டுப்பாடு விசாரணை பற்றிய வழக்கு பிரச்சனை தொடரும் என்று மும்பை ஹைகோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆக்சிசன்  மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனையை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்குஆக்சிசன் தடுப்பூசி வழக்குகள் மாற்றப்படும் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

எனினும் உச்ச நீதிமன்றம் விசாரித்தாலும் தங்கள் விசாரணை தொடரும் என மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வரை விசாரணை தொடரும் என்று மும்பை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தீபங்கர் அவர் அறிவித்துள்ளார்.

From around the web