ஜாக்கிரதை வாக்கு எண்ணிக்கையும் தடை விதிக்க நேரிடும் ஹை கோர்ட் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிடில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று கூறியுள்ளது ஐகோர்ட்!
 
ஜாக்கிரதை வாக்கு எண்ணிக்கையும் தடை விதிக்க நேரிடும் ஹை கோர்ட் எச்சரிக்கை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்று முடிந்தது. மேலும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக முக கவசம் சனிடைசர் கையுறை போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் வாக்களிக்க அனுமதித்தனர் அதிகாரிகள்.  தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு மத்தியில் கண்காணிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவித்திருந்தனர்.vote

ஆனால் தமிழகத்தில் தற்போது நிலை தலைகீழாக உள்ளது. காரணம் தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா  தாக்கம் அதிகரித்துள்ளதால் வாக்கு எண்ணப்படும் தேதி மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ தமிழகத்தில் முன்னர் அறிவித்திருந்தது இப்படி மே இரண்டாம் தேதி நடைபெறும் ஆனால் வாக்கு எண்ணிக்கையானது கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நடைபெறும் என்று கூறியிருந்தார்.

ஐகோர்ட்டு  சில எச்சரிக்கை விடுத்துள்ளது, அதன்படி கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாள் என்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் சுகாதார செயலாளரிடம் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் கரூர் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகளை மாற்றக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார் .ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் ஆனது வாக்கு எண்ணிக்கையின் போது கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்பு தரப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தி நாளும் தவறில்லை என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. காரணம் பாதிப்பால் தமிழகத்தின் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் நீதிமன்றம் தற்போது கருத்துக் கூறியுள்ளது.

From around the web