திருச்சுழி தொகுதி தேர்தல் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

 திருச்சுழி தொகுதியில் சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ளதால் தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சி கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 234 தொகுதிகளிலும்  கூட்டணி வேட்பாளர்கள் என பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் .

election

இந்நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியை  234 தொகுதிகளில் தனது கட்சியின் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இக்கட்சியில் 117 ஆண் வேட்பாளர்களும் ,117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தல் தடைசெய்ய சுயச்சை வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ய மறுத்துத்துள்ளது. மேலும் ஆவணங்களை ஆணையத்திடம் வழங்கி மனுதாரர் நிவாரணம் பெறலாம் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம். மேலும் வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருவதால் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயச்சைவேட்பாளர் திருப்பதி வழக்கு தொடுத்திருந்தார்.மேலும் திருச்சுழி தொகுதியில் தேர்தல் ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் உயர் நீதிமன்றம் தேர்தல் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது

From around the web