அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்!

தியாகராஜ நகர் எம்எல்ஏ சத்யா மீதான புகார் குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
 
அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் எம்ஜிஆர் கட்சி என்றால் அனைவரும் கூறுவது அதிமுக தான். எம்ஜிஆருக்கு பின்னர் அம்மா கட்சி என்ற பெயரையும் இந்த அதிமுக  பெற்றது. மேலும் இரட்டை இலை என்றாலே அனைவரும் இந்த அதிமுகவை கூறுவர். இத்தகைய சிறப்பினை பெற்று கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் பாமக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் அவர்கள் கூட்டணியில் தேர்தலில் சந்தித்துள்ளது. அதிமுகவில் இந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் தனது தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

highcourt

மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.  தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து. மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியினர் இந்த வாக்கு  எண்ணிக்கைக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஏனென்றால் இவர்கள் இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அதிமுகவின் எம்எல்ஏவாக உள்ள ஒருவர் மீது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தியாகராய நகர் எம்எல்ஏ சத்யா மீதான புகார் எழுந்தது. மேலும் இதற்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. 2017-18 ஆண்டில்குடிநீர் வசதி மேம்பாட்டிற்கு ஒதுக்கிய 2 கோடியில் 8 லட்சம் மட்டுமே செலவிட பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் தற்போது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

From around the web