"இரண்டு வாரங்களில் அறிக்கை வேண்டும்"- உயர் நீதிமன்றம் உத்தரவு!!

ஆக்கிரமிப்பிலிருந்து  இருந்த நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவு
 
highcourt

தற்போது நான் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கட்டிடங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது மகிழ்ச்சி அளிப்பதாகவும் காணப்படுகிறது. ஆனால் பல பகுதிகளில் இந்த கட்டிடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளின் மேல் கட்டப்படுவது வேதனையளிக்கிறது. மேலும் ஏரிகளில் பிளாட்டுகள் வைக்கப்பட்டு அதன்மீது கட்டடம் கட்டப்பட்டு விற்பனை செய்யபடுகிறது. மேலும் பல பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.thamaraikeni

இதுகுறித்து தற்போது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவினை பிறப்பித்துள்ளது. செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது போன்ற தமிழகத்தின் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கால்வாய்களுக்கு இடையூறு ஏற்படுவது, நீர் தேங்கும் பகுதிகளில் பாதுகாப்பும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல்நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

From around the web