இதான் உண்மை:கோரத்தாண்டவத் தோடு காத்திருக்கும் கொரோனா!

கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளது மத்திய அரசு!
 
இதான் உண்மை:கோரத்தாண்டவத் தோடு காத்திருக்கும் கொரோனா!

மக்கள் மத்தியில் தற்போது கொடூரமான நோயாகக் காணப்படுகிறது கொரோனா வைரஸ். பல்வேறு மாநிலங்களும் பல்வேறு தடைகளை உத்தரவுகளை விதித்துள்ளனர். மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஒரு சில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. மேலும் சில மணி நேரத்துக்கு முன்னர் 55 மணி நேரத்திற்கு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு. இந்நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.goovernment

தற்போது பல மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. ஆயினும் இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுகிறது.  தற்போது மத்திய அரசு மக்களுக்கு மேலும் அச்சத்தை கூறும் தகவலை கூறியுள்ளது.அதன்படி கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்த கோரத்தாண்டவம் ஆனது வரும் வாரங்களில் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மேலும் மக்கள் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சொல்லவில்லை, ஆனால் இது தான் நிதர்சனம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் வரவிருக்கும் மிக மோசமான சூழலை நாம் முழு அளவில் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இத்தகைய தகவலை அளித்துள்ளது வேதனை அளிக்கிறது.

From around the web