தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் இதோ!கோடையும் உஷ்ணமும் தணிந்தது!

கொடைக்கானல் அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது!
 
தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் இதோ!கோடையும் உஷ்ணமும் தணிந்தது!

மக்கள் மத்தியில் மே மாதம் தொடங்கினாலே ஒரு அச்சம் நிகழும். காரணம் என்னவெனில் மே மாதம் ஆனது கோடை காலத்தின் ஆரம்பமே கருதப்படுகிறது. இதனால் மே மாதத்தில்வெயிலின் தாக்கம் ஆனது சுட்டெரிக்கும். மேலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும். குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவை அதிகரிக்க தொடங்கும். மேலும் அதன் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். அதனால் சென்னைவாசிகள் மே மாதம் தொடங்கினால் மிகவும் அச்சத்துடன் காத்திருப்பர்.

kodaikanal

மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளதால் தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.வெயிலின் தாக்கமானது இயல்பு நிலையை விட அதிகமாக உள்ளது. சில தினங்கள் முன்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறியிருந்தது. அதன்படி தமிழகத்தில் தற்போது சில பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஆம்பூர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானல் நகரில் பரவலாக மழை பெய்து வருவதாகவும், எனவே மேலும் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதற்கடுத்து கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் கோடை காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை உருவாகும் சமயத்திலும் தற்போது மழை வந்து  கை கொடுப்பதாக எண்ணி மழையை சந்தோஷத்தோடு  வரவேற்கின்றனர்.

From around the web