தமிழகத்தில் மாவட்ட ரீதியாக வாக்குப் பதிவுகள் இதோ!

தமிழகத்தின் மதியம் 1 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவுகள் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது!
 
தமிழகத்தில் மாவட்ட ரீதியாக வாக்குப் பதிவுகள் இதோ!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  இன்று காலை தொடங்கியது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் காலை முதல் இன்று இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மிகவும் தீவிரமாக போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவைகளும் கொடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான முறையில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

tamilnadu

மேலும் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வேலையில் மிகவும் கண்காணிப்புடன் கவனமாக செயல்பட்டு வருகின்றனர் தமிழகத்தில் மதியம் ஒரு மணிவரை 39.61%வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் புதுச்சேரியிலும் வாக்கு பதிவானது மதியம் 1 மணிவரை 53.01%சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் தமிழகத்தில் அதிக வாக்கு பதிவானது விருதுநகர் மாவட்டத்திலும் குறைவான வாக்கு பதிவானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல மாவட்டங்களிலும் வாக்குகள் பதிவாகி இருப்பது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் 39.6 6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது மேலும் சிவகங்கையில் 40.67 %பதிவாகியுள்ளது. மேலும் விருதுநகரில் 41.79 சதவீத வாக்குகள் பதிவானது.தேனியில் 38.9 9வாக்கு சதவீதமும் தென்காசியில் 39.1 7 சதவீதமும்  புதுக்கோட்டையில் 40.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடியில் 39.60 சதவீதமும் ராமநாதபுரத்தில் 39.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது .கரூரில் 40.96சதவீதமும், திருப்பூரில் 40.80 சதவீதமும் விழுப்புரத்தில் 41.68% சதவீதமாக உள்ளது.

From around the web