ஹெலிகாப்டர் பயணம்; புயல் பாதித்த பகுதியில் ஒரு பார்வை! "பிரதமரும் முதல்வரும்"

குஜராத் புயல் பாதிப்பை பார்வையிட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
 
modi

சில தினங்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. காரணம் என்னவெனில் அரபிக் கடலில் புயல் ஒன்று உருவாக்கப்படுகிறது.டவ் தே புயல் என்றும் அதற்கு பெயர் வைத்து அழைக்க நிலையில் இந்தப் புயலின் பாதிப்பால் மும்பை மாநகரமே பாதித்தது என்று கூறலாம். மேலும் மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தெருவோரங்களில் வேகமாக ஓடியது. மேலும் மும்பையில் பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா கேரளா போன்ற பகுதிகளிலும் இந்தப் புயலின் பாதிப்பு அதிகம் காணப்பட்டது.modi

மேலும் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியது. நம் தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் வனப்பகுதியில் அதிகமுள்ள காணப்படும் மாவட்டமாக உள்ள நீலகிரியில் புயலினால் கனமழை பெய்தது. மேலும் அங்குள்ள பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியது. இவை மட்டுமின்றி இந்த புயல்  குஜராத் பகுதியினை ஆட்கொண்டது என்றே கூறலாம். இதனால் அப்பகுதியில் பல்வேறு சேதங்கள் அதிகமாக நிகழ்ந்தன.

இந்நிலையில் இது குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது பார்வையிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் குஜராத்தில் இந்த டவ் தே  புயலால் ஏற்பட்ட பாதிப்பை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு வருகிறார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி. மேலும் அவருடன் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியும் பிரதமருடன் சென்று டவ் தே  புயல் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது இதனால் குஜராத் பகுதியில் டவ் தே  புயல் பாதிப்பு அதனால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமாக உள்ளது என்பது தற்போது இதன் மூலமே தெரிய வருகின்றது.

From around the web