கடலோர மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தும்!5 டிகிரி வரை அதிகரிக்கும்!

தமிழகத்தில் உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகபட்சம் ஐந்து டிகிரி வரை அதிகரிக்கக்கூடும்!
 
கடலோர மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தும்!5 டிகிரி வரை அதிகரிக்கும்!

தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பநிலையானது அதிகமாக காணப்படுகிறது. மேலும் கோடை காலம்  தொடங்கினால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். இதனால் சென்னை வாசிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில நாட்களில் தினங்களாக பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.weather

அதனால் மழை பெய்யும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சந்தோஷம் உற்சாகத்தோடும் மழையை வரவேற்கின்றனர். மேலும் அப்பகுதியில் உஷ்ணமும் அதோடு மட்டுமின்றி குளிர்ச்சியான நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது. இத்தகைய இன்பமான தகவலை கூறி இருந்தாலும் தற்போது பல எரிச்சலான தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என்று கூறியுள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில் வெயிலின் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் அளவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வெயில் கொளுத்தும் காற்றில் ஈரப்பதம் குறைவதால் சென்னை முதல் குமரி வரை மாலை முதல் வெக்கை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web