இன்னும் சில நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகுது கனமழை!!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது தமிழகத்தில் வானிலையானது மிகவும் இதமான சூழலில் காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் உஷ்ணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கனமழை தொடர்ந்து நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முதலில் ஆகஸ்ட் 21ம் தேதியில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தது.rain

அதைத் தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 22ஆம் தேதி திருச்சி மதுரை நீலகிரி கோவை தேனி திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதை தொடர்ந்து நெல்லை தென்காசி வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது,

23ம் தேதியில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும்சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web