"தமிழகத்தில் கனமழை"! குறிப்பாக இந்த நாலு மாவட்ட மக்களுக்கு ஆனந்தம் பொழியும்!!

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது தமிழகத்தில் கோடை காலம் . இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்புநிலை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப் படுகிறது. மேலும் வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்படுகிறது. கோடை காலத்திலும் பல பகுதிகளில் கோடை மழை பெய்து ஒரு பொது மக்களுக்கு இதமான வானிலையே உருவாக்குகிறது.weather

இத்தகைய சூழலில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு இன்பமான தகவலை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அந்த வரிசையில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதை தொடர்ந்து சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வரிசையில் நாமக்கல் ஈரோடு நீலகிரி திருப்பூர் கோவை கரூர் திண்டுக்கல் கடலூர் காரைக்கால் மயிலாடுதுறை நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web