செய்யாற்றில் கன மழை !மக்கள் மகிழ்ச்சி!கோடை உஷ்ணம் நீக்கப்பட்டது!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
 
செய்யாற்றில் கன மழை !மக்கள் மகிழ்ச்சி!கோடை உஷ்ணம் நீக்கப்பட்டது!

இந்தியாவில் கோடை காலம் என்றால் அனைவரும் முதலில் சொல்வது மே மாதம்தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெயிலின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கமானது சுட்டெரிக்கிறது. இந்நிலையில்தமிழகத்தில் கோடை காலம் வந்தால் சென்னை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் .மக்கள் அச்சத்துடன் மே மாதத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

rain

இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையமானது சில இன்பமான தகவலை வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சென்னை வானிலை ஆய்வு மையமானது நேற்றையதினம் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று கூறியது அதன்படி ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அனக்காவூர், வெம்பாக்கம், மாங்கால் கூட்டு சாலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளனர்.

From around the web