அடுத்த 4 நாட்களுக்கு 18 மாவட்டங்களில் கனமழை! இன்று மட்டும் 5 மாவட்டங்களுக்கு  மிக கனமழை!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்திற்கு மழைக்காலம் படிப்படியாக வந்துகொண்டே இருக்கிறது என்று கூறலாம் இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை போக்குவதோடு மட்டுமில்லாமல் பல பகுதிகளில்  வெயில் தாக்கம் குறைக்கப்படும். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவர். இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது.weather

அதன்படி அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இவை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சிவகங்கை மதுரை புதுக்கோட்டை தஞ்சை சேலத்தில் இடி மின்னலுடன் கூடிய  மிக கனமழை இன்று பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web