24 மணி நேரத்தில் -"4 மாவட்டங்களுக்கு கனமழை! 8 மாவட்டங்களுக்கு மிதமான மழை!!"

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
weather

தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்கிறது. மழை பெய்யும் பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில பகுதிகளில் இந்த மழையானது கொட்டி தீர்க்கிறது. இதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீரானது வெள்ளம் போல ஓடுகிறது. இந்நிலையில் தற்போது மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.மேலும் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகரும்.rain

  இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எண்ணியிருந்தனர். இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையமானது சில இன்பமான தகவல்களை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அந்த நான்கு மாவட்டங்கள் எவை என்றால் கன்னியாகுமரி நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் என்றும் கூறப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களில் பொதுவாக இயற்கை சுற்றுலா தலங்களும் குளிர்ச்சியான பகுதிகளும் அதிகமுள்ள மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சேலம் கிருஷ்ணகிரி திருச்சி அரியலூர் பெரம்பலூர் மதுரை திருநெல்வேலி தென்காசி இந்த மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தற்போது வரை கன்னியாகுமரியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் புரண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

From around the web