6 மாவட்டங்களில் கனமழை 4 நாட்களுக்கு நீடிப்பு!ஆனால் சென்னையில் மட்டும் வெயில் அதிகம்!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. இந்த கோடை காலத்தில் மக்கள் அனைவரும் மிகுந்த எரிச்சலை உணர்கின்றனர். மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.  ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அது மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.weather

அதன்படி சேலம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்கள் ,மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள் ,புதுவை ,காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த மழையானது மே 21, 22, 23, 24 ஆகிய 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் பெரும்பாலும் கோவை நீலகிரி தேனி மற்றும் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகரிக்கக்கூடும் என்றும் அதுவும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கொளுத்தும் என்றும் கூறியுள்ளது.

From around the web