ஏப்ரல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம்!

தரைக் காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும்!
 
ஏப்ரல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம்!

கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மே மாதம் மட்டும்தான். ஆனால் கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக சுட்டெரிக்கிறது. சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் சில தினங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது மக்களுக்கு மிகுந்த சோகத்தையும் எரிச்சலையும் உண்டாக்கி உள்ளது.

sun

 சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது தற்போது மேலும் கவலைக்கிடமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை வெயிலின் தாக்கம் ஆனது இயல்பை விட அதிகரிக்கும் எனவும் கூறியது. மேலும் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசுவதால் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் கூறியுள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட நான்கு முதல் ஆறு செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏப்ரல் 5ல் கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ,திருப்பூர், ஈரோடு ,கோவையில் வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்  பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 4 மணிவரை திறந்த வெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர். மக்கள், விவசாயிகள் ,தேர்தல் வேட்பாளர் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

From around the web