துயரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்

குழந்தை சுஜித் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த சில மணி நேரத்துக்குள் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பல விதமான கடும் முயற்சிகளை செய்தனர் இரண்டு மூன்று இடங்களில் இருந்தும் கூட கடும் ரிக் இயந்திரங்கள் கொண்டு தோண்டியும் அண்ணா பல்கழை மாணவர்கள்,மதுரை மணிகண்டன் டீம், நாமக்கல் டீம், மஞ்சப்பட்டி டீம் என பல டீம்களை வைத்து களத்தில் செயல்பட வைத்தும் கடைசியில் உயிருடன் சுஜித்தை வெளியே எடுக்க முடியாமல் போய் விட்டது.
 

குழந்தை சுஜித் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த சில மணி நேரத்துக்குள் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

துயரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்

பல விதமான கடும் முயற்சிகளை செய்தனர் இரண்டு மூன்று இடங்களில் இருந்தும் கூட கடும் ரிக் இயந்திரங்கள் கொண்டு தோண்டியும் அண்ணா பல்கழை மாணவர்கள்,மதுரை மணிகண்டன் டீம், நாமக்கல் டீம், மஞ்சப்பட்டி டீம் என பல டீம்களை வைத்து களத்தில் செயல்பட வைத்தும் கடைசியில் உயிருடன் சுஜித்தை வெளியே எடுக்க முடியாமல் போய் விட்டது.

இது குறித்து இரங்கல் தெரிவித்துள்ள விஜய பாஸ்கர்,

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது என்றும், நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எப்படியும் வந்துவிடுவாய் என்று தான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம் என்றும், மருத்துவமனையில் வைத்து உச்சப்பட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்ததாக கூறியுள்ளார். இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web